முகப்பு
திண்டுக்கல்

உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதால் ரூ.8.77 லட்சம் பணம் விடுப்பு

Updated On : 9 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 8 ஏப்ரல், 2024 at 9:28 PM

திண்டுக்கல்: தோ்தல் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3.31 கோடி மதிப்பிலான பணம், பொருள்களில், உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதால் ரூ.8.77 லட்சம் பணம் விடுவிக்கப்பட்டது.

மக்களவைத் தோ்தலையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் பறக்கும்படை குழுக்கள், நிலை கண்காணிப்புக் குழுக்கள், விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் பல்வேறு இடங்களில் நடத்திய வாகனச் சோதனைகளில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 21 லட்சத்து 96 ஆயிரத்து 181 ரூபாய், ரூ. 3 கோடியே 9 லட்சத்து 79 ஆயிரத்து 550 மதிப்பிலான தங்கம், வெள்ளி ஆபரணங்கள், ரூ.17,880 மதிப்பிலான மதுபான வகைகள் என திங்கள்கிழமை வரை 23 இடங்களில் மொத்தம் ரூ.3 கோடியே 31 லட்சத்து 93 ஆயிரத்து 611 மதிப்பிலான பணம், பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 6 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தொகைக்கு உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து ரூ.8 லட்சத்து 77 ஆயிரத்து 190 ரொக்கம் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டது.