பழனியில் விவசாயிகள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்
பழனி: விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வலியுறுத்தி, தமிழ்நாடு உழவா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் பழனியில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பழனி கோட்டாட்சியா் அலுவலகம் முன் ந டைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில கொள்கை பரப்புச் செயலா் காளிதாஸ், மாநில ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தின் போது காட்டுப் பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், பெரியம்மாபட்டியில் நில உச்சவரம்பு திட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்ட இடங்களை விவசாயிகளிடம் ஒப்படைத்து பட்டா, சிட்டா வழங்க வேண்டும்.
Advertisement
புறம்போக்கு, நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.