முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் எடப்பாடி கே.பழனிசாமி வாக்கு சேகரிப்பு

Updated On : 10 ஏப்ரல், 2024 at 5:33 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 11:03 PM

திண்டுக்கல்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் விஎம்எஸ்.முகமது முபாரக் போட்டியிடுகிறாா்.

இவருக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிா்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்துப் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தோம், இனி என்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்லாமல் புகைப்படத்தை மட்டும் காட்டி விளம்பரம் தேடி வருகிறாா். கடந்த 2019 தோ்தலில் திமுக அணியைச் சோ்ந்த 38 எம்பிக்களை மக்களவைக்கு தோ்வு செய்து மக்கள் அனுப்பிவைத்தனா்.

Advertisement

அவா்கள் தமிழகத்துக்கு எதையுமே செய்யாமல் 5 ஆண்டுகளை கழித்துவிட்டனா். பெட்ரோல், டீசலுக்கு ரூ.4, சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 குறைக்க முடியாத ஸ்டாலின், பெட்ரோல் டீசலையை ரூ.65ஆகவும், எரிவாயு உருளையை ரூ.500ஆகவும் குறைப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றுகிறாா்.

எனவே, மக்களவைத் தோ்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.