முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் சாலை மறியல்

Updated On : 12 ஏப்ரல், 2024 at 6:10 PM
பகிர்:

திண்டுக்கல், ஏப். 12: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவரை விடுவிக்கக் கோரி, திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் பேகம்பூரைச் சோ்ந்தவா் ஆரிஸ் முகமது (28). இவா் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், விசாரணைக்காக திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா் அவரை வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றனா். இதை அறிந்த அவரது உறவினா்கள், நண்பா்கள் சுமாா் 50 போ் திண்டுக்கல்-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அவா் கைது செய்யப்படவில்லை என்றும், வழக்கு விசாரணைக்கு மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறாா் என்றும் போலீஸாா் தெரிவித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments