முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 109 கிலோ இறைச்சி பறிமுதல்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:39 PM
பகிர்:

திண்டுக்கல்: தடையை மீறி திண்டுக்கல்லில் விற்பனை செய்யப்பட்ட கடைகளிலிருந்து 109 கிலோ இறைச்சி ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மகாவீரா் ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதை மீறி திண்டுக்கல்லில் இறைச்சி விற்பனை செய்தவா்கள் மீது மாநகராட்சி சுகாதார அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொண்டனா். இதன்படி, ஆட்டிறைச்சி 42 கிலோ, கோழி இறைச்சி 67 கிலோ, 21 வெட்டுக் கத்தி, 10 வெட்டுக் கட்டை, 3 தராசுகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments