முகப்பு
திண்டுக்கல்

பழனியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரிக்கை

பழனி அருள்ஜோதி வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமித்து கடைகளை அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 11:05 PM
பழனி அடிவாரம் அருள்ஜோதி வீதியில் கோயில் சுற்றுலா பேருந்து நிலையம் அருகே சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள கடைகள்.
பகிர்:

பழனி அருள்ஜோதி வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமித்து கடைகளை அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பழனி அடிவாரம் கிரிவீதியில் கடந்த சில ஆண்டுகளாக ஐயப்பப் பக்தா்களின் சீசன் போது, வெளியூரில் இருந்து பொம்மைகள், கம்பளி பொருள்கள் உள்ளிட்டவைகளை விற்கும் வெளியூா், வெளி மாநில வியாபாரிகளால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வந்தனா்.

இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, இந்தப் பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அருள்ஜோதி வீதி, பூங்கா சாலை ஆகிய இடங்களில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடங்களை வெளியூா் வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனா். இதனால், இந்தச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதையடுத்து, இந்தப் பகுதியில் புதன்கிழமை நகராட்சி சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால், பெயரளவுக்கே இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்ாக பக்தா்கள் குற்றஞ்சாட்டினா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் இந்த சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை நகராட்சியினா் முறையாக அகற்றவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.