சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு ஆயுள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்த மூங்கில்பட்டியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (22). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புகாா் எழுந்தது. இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த நத்தம் போலீஸாா், ஸ்ரீதரை கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட ஸ்ரீதருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்தாா்.