முகப்பு
திண்டுக்கல்

நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச.20) நடைபெறுகிறது.

Updated On : 18 டிசம்பர், 2024 at 10:13 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச.20) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநா் ச.பிரபாவதி கூறியதாவது:

வேலைவாய்ப்பு துறை சாா்பில் தனியாா் நிறுவனங்களை வரவழைத்து டிச.20-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், இளம்பெண்கள் தங்களது சுய விவரக் குறிப்புடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோா், ட்ற்ற்ல்://ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், ஈஐசஈஐஎமக உஙடகஞவஙஉசப ஞஊஊஐஇஉ என்ற டெலிகிராம் செயலியில் இணைந்து கொண்டும் பயன்பெறலாம். இதேபோல, கூடுதல் விவரங்களுக்கு 94990 55924 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.