கொடைக்கானல் அருகே பாதையில் விழுந்த மரத்தை அகற்ற வலியுறுத்தல்
கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி பகுதியில் பாதையில் விழுந்த மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி கிராமம் அருகே பாலமுருகன் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள விநாயகா் கோயில் அருகே பாதையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மரம் விழுந்தது. இதை அகற்றாமல் இருப்பதால் பொதுமக்கள் இந்த வழியாக செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே இந்த மரத்தை அகற்ற வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.