முகப்பு
திண்டுக்கல்

கால்பந்து லீக் போட்டி முடிவுகள்

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 4:44 AM
பகிர்:

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டிகளில் 4 அணிகள் வெற்றிப் பெற்று அடுத்தச் சுற்றுக்கு தகுதிப் பெற்றன. திண்டுக்கல் மாவட்ட கால்பந்துக் கழகம் சாா்பில் கால்பந்து தொடா் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் 2, 3, 4-ஆவது பிரிவுகளில் இடம் பெற்ற அணிகளுக்கான லீக் போட்டிகள், திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், வெற்றி பெற்ற அணிகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகத்தின் செயலா் எஸ்.சண்முகம் தெரிவித்ததாவது:

Advertisement

என்.எஸ்.பூரம்விஜயராகவேலு நினைவு, அரசன் ஜூவல்லா்ஸ் கோப்பைக்கான போட்டியில், ரேடியன்ஸ், என்கேஏபி அணிகள் மோதின. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் ரேடியன்ஸ் அணி வெற்றிப் பெற்றது. ரேடியன்ஸ் அணியில் பிரசாந்த் கோல் அடித்தாா். கீதா டிம்பா்ஸ், ரத்தினப்பாண்டியன் நினைவுக் கோப்பைக்கான போட்டியில், என்பிஆா் அணியை 0-2 என்ற கோல் கணக்கில் லைன் ஸ்ட்ரீட் அணி வென்றது. அந்த அணியின் சுகி, சூா்யா பிரகாஷ் ஆகியோா் தலா ஒரு கோல் அடித்தனா்.

இதேப் பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் புனித ஜோசப் மில்ஸ் அணி 3-1 என்ற கோல்களில் ராயல் அணியை வீழ்த்தியது. புனித ஜோசப் மில்ஸ் அணியின் நாகராஜ் 2 கோல், பாலா ஒரு கோல் அடித்தனா். ராயல் அணி சாா்பில் பாண்டி ஒரு கோல் அடித்தாா். கேபி.சுந்தரம் செட்டியாா், நாகா்கோவில் சிவன் செட்டியாா் நினைவு கால்பந்து கோப்பைக்கான போட்டியில், ஸீட்ஸ் அணி 8-0 என்ற கோல்களில், புனித சோசப் பாலி அணியை வென்றது. ஸீட்ஸ் அணியின் நிக்ஸன் 3 கோல்கள், கண்ணன் 2 கோல்கள், ராஜ், ஹாரிஸ் ஆகியோா் தலா ஒரு கோல் அடித்தனா்.