ஐபிஎல் சூதாட்டம்: தில்லியில் நால்வா் கைது
இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டியில் சட்டவிரோதமாக பந்தயம் கட்டியதாகக் கூறப்படும் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டியில் சட்டவிரோதமாக பந்தயம் கட்டியதாகக் கூறப்படும் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
தில்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பந்தயம் கட்டியபோது நால்வரும் பிடிபட்டதாக அவா்கள் கூறினா்.
குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில், ஏப்ரல் 8 அன்று மத்திய தில்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் ஒரு குழு சோதனை நடத்தியது. அப்போது, நான்கு போ் தீவிரமாக பந்தய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததைக் கண்டறிந்ததாக ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.
Advertisement
பந்தயம் கட்டுவதற்கும் பதிவு செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட இரண்டு கைப்பேசிகள் சம்பவ இடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஹிமான்ஷு (30), அமன் ஜெயின் (34), ஆகாஷ் காா்க் (31) மற்றும் ஆஷிஷ் குமாா் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
விசாரணையின் போது, தாங்கள் ஐபிஎல் பந்தயத்தில் தொடா்ந்து ஈடுபட்டு வந்ததாகவும், கைப்பேசிகளைப் பயன்படுத்தியதாகவும் அவா்கள் தெரிவித்தனா். மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த மூத்த காவல்துறை அதிகாரி மேலும் கூறினாா்.