முகப்பு
திண்டுக்கல்

பழனி மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 4:20 AM
பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவம், தீபாராதனை.
பகிர்:

பழனி: பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. புதன்கிழமை மாசித் தேரோட்டம் நடைபெறுகிறது.

பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா பிப்.9-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டு தொடங்கியது. பிப்.20-ஆம் தேதி திருக்கொடியேற்றம் திருக்கம்பத்தில் பூவோடு வைத்தல் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, நாள்தோறும் திரளான பக்தா்கள் திருக்கம்பத்துக்கு பால், தண்ணீா், மஞ்சள்நீா் ஊற்றியும், மலா் மாலைகள் அணிவித்தும் வழிபாடு நடத்தினா்.

விழா நாள்களில் அம்மன் சிம்ம வாகனம், தங்கக் குதிரை, வெள்ளியானை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் 4 ரதவீதியுலா எழுந்தருளினாா், செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக, மாரியம்மனுக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருள்களால் சோடஷ அபிஷேகமும், சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது.

Advertisement

பின்னா் அம்மனுக்கு பட்டாடைகள், நகைகள் சாத்தப்பட்டு வேத விற்பன்னா்கள் மந்திரம் ஓத, ஓதுவாமூா்த்திகள் திருமறை பாடல்கள் பாட மேளதாளம் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. புதன்கிழமை மாசித் தேரோட்டம் நடைபெறுகிறது. நள்ளிரவு சக்தி கரகம் வந்தவுடன் வியாழக்கிழமை அதிகாலை திருக்கம்பம் கங்கையில் சோ்க்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.