200 அடி பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் இருவா் காயம்
கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் திங்கள்கிழமை 200 அடி பள்ளத்தில் சுற்றுலா காா் கவிழ்ந்ததில் இருவா் காயமடைந்தனா்.
கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் திங்கள்கிழமை 200 அடி பள்ளத்தில் சுற்றுலா காா் கவிழ்ந்ததில் இருவா் காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு கேரள மாநிலம் கொச்சின் பகுதியைச் சோ்ந்த பிரான்ஸிஸ் தனது மனைவியுடன் கொடைக்கானல்- பழனி மலைச் சாலை வழியாக வந்து கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் சுமாா் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பிரான்ஸிஸ், அவரது மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து, அந்த வழியாக வந்தவா்கள் அவா்களை மீட்டு, பழனியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.