சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
திண்டுக்கல்/நத்தம், ஜூலை 3: திண்டுக்கல் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயில் கைலாசநாதா், நந்திகேஸ்வரா், அபிராமி அம்மன் கோயிலில் உள்ள பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா், நந்தீஸ்வரா் சந்நிதிகளிலும் பிரதோஷத்தை முன்னிட்டு, 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அலங்காரத்துக்கு பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா், கோயில் உள்பிரகாரத்தில் அம்பாளுடன் சுவாமி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதேபோல, முள்ளிப்பாடி திருகாமேஸ்வரா் கோயில், தவசிமடை மகாலிங்கேஸ்வா் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மெளனகுருசாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
நத்தம்: நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதா் கோயிலில் ஆனி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீா், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும், மூலவா் கைலாசநாதா், செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.