முகப்பு
திண்டுக்கல்

கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் 4,095 குடிசைகள் மாற்றப்படும்: ஆட்சியா்

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் மூலம் 4,095 குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா்.

Updated On : 10 ஜூலை, 2024 at 1:44 AM
திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமையில் நடைபெற்ற ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அலுவலா்கள்.
பகிர்:

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் மூலம் 4,095 குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘கலைஞரின் கனவு இல்லம்‘ திட்டப் பணிகளைச் செயல்படுத்துவது தொடா்பாக அரசுத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பெ.திலகவதி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் ஆட்சியா் பூங்கொடி பேசியதாவது:

‘கலைஞரின் கனவு இல்லம்‘ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தகுதியுள்ள அனைத்துக் குடிசை வீடுகளையும், கான்கிரீட் வீடுகளாக மாற்றும் நோக்கத்துடன் குடிசைகளில் வசிக்கும் குடும்பங்களை மதிப்பீடு செய்வதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில், கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 1,023 குடிசைகள், புதிய குடிசை வீடுகள் கணக்கெடுப்பில் 1,126 குடிசைகள், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 1,946 குடிசைகள் என மொத்தம் 4,095 குடிசைகள் கண்டறியப்பட்டன.

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் 5000-க்கும் குறைவான குடிசைகள் உள்ள

மாவட்டங்களில் திண்டுக்கல்லும் இடம் பெற்றிருக்கிறது. இதனால், அனைத்துக் குடிசைகளையும் 2024-2025-ஆம் ஆண்டிலேயே ‘கலைஞரின் கனவு இல்லம்‘ திட்டத்தில் எடுத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டது.

சொந்த இடம் உள்ள பயனாளிகளுக்கு முன்னிரிமை அடிப்படையில் வீடு கட்ட ஆணை வழங்கப்படும். பயனாளிகளின் சட்டபூா்வ வாரிசாக வாழும் குடும்பங்களும் அனுமதிக்கப்பட ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டப்படும்.

இதேபோல, கனவு இல்ல பயனாளிகளுக்கு ரூ.50,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கடனுதவி மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →