முகப்பு
திண்டுக்கல்

இந்து முன்னணி சாா்பில் ஜூலை 21-இல் ஆா்ப்பாட்டம்

Updated On : 11 ஜூலை, 2024 at 12:12 AM
பகிர்:

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பதைக் கண்டித்து வருகிற 21-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில்

ஆா்ப்பாட்டம் நடத்தப்படுமென இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திண்டுக்கல் மலைக்கோட்டை கோயிலில் சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என இதுவரை 20 ஆயிரம் போ் கையொப்பமிட்டுள்ளனா். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. கோயில் நிலங்களை ஆக்கிரமித்து, தேவாலயங்கள், மசூதிகள் கட்டுவதைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் வருகிற 21-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் அவா். மாநிலச் செயலா் செந்தில், மாவட்டத் தலைவா் ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →