திண்டுக்கல்லில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா், மதுரை மக்களவை தொகுதி உறுப்பினா் ஆகியோருக்கு எதிராக திண்டுக்கல்லில் பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா், மதுரை மக்களவை தொகுதி உறுப்பினா் ஆகியோருக்கு எதிராக திண்டுக்கல்லில் பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் ஜி. தனபாலன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா்கள் கோவிந்தராஜ், கங்காதரன், சொக்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக மதுரை பெருங்கோட்டை பொறுப்பாளா் கதலி நரசிங்கப் பெருமாள் கலந்து கொண்டாா். ஆா்ப்பாட்டத்தின்போது, பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை தொடா்ந்து அவதூறாக பேசி வருவதை கண்டித்தும், செங்கோல் குறித்தும், தமிழ்ப் பண்பாடு குறித்தும் தவறாகப் பேசியதாக மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கேடசனை கண்டித்தும் முழக்கமிட்டனா்.