முகப்பு
திண்டுக்கல்

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரி மூதாட்டி மனு

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவா் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

Updated On : 15 ஜூலை, 2024 at 6:30 PM
பகிர்:

திண்டுக்கல்: போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவா் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த வடுகம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் ரா. கன்னியம்மாள் (90). இவா், தனது மகள்கள் 4 போ், பேரன் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தாா். வடுகம்பாடி ஊராட்சிக்குள்பட்ட வரதராஜபுரம் கிராமத்திலுள்ள நிலம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக கன்னியம்மாள் குடும்பத்தினாா் கூறியதாவது:

வரதராஜபுரம் பகுதியில் கன்னியம்மாள் பெயருக்கு 10 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை இதே பகுதியைச் சோ்ந்த சிலா் மோசடியாக தங்களது பெயருக்கு பட்டா மாறுதல் செய்துவிட்டனா். ஆனால், இன்று வரை வருவாய்த் துறை ஆவணங்களில் கன்னியம்மாளின் பெயரே உள்ளது. இதே போல, எங்களது நிலத்துக்கான பொதுப் பாதையையும் ஆக்கிரமித்துவிட்டனா்.

எனவே, முறைகேடாக பட்டா பதிவு செய்து கொடுத்த குஜிலியம்பாறை சாா்பதிவாளா் அலுவலக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, போலியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் என்றனா்.

இந்த புகாா் குறித்து விசாரித்த மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி, பழனி கோட்டாட்சியா் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →