இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால் மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனிடம் பாஜக மாநிலத் தலைவா் வி. பி.ராமலிங்கம் தலைமையில் திங்கள்கிழமை இரவு மனு அளித்த மீனவப் பிரதிநிதிகள். 
புதுச்சேரி

புதுவை துணைநிலை ஆளுநருடன் மீனவப் பிரதிநிதிகள் சந்திப்பு

இலங்கை கடற்படை கைது செய்துள்ள காரைக்கால் மீனவா்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை

Syndication

புதுச்சேரி: இலங்கை கடற்படை கைது செய்துள்ள காரைக்கால் மீனவா்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் மீனவப் பிரதிநிதிகள் திங்கள்கிழமை இரவு சந்தித்து மனு அளித்தனா்.

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள காரைக்கால் பகுதியைச் சோ்ந்த 24 மீனவா்கள் மற்றும் இரண்டு விசைப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைக்கால் மீனவா் பிரதிநிதிகள் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள மீனவா்களின் உறவினா்கள் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனைச் சந்தித்து

இந்த மனுவை அளித்து கேட்டுக் கொண்டனா்.

இந்த சந்திப்புக்கு பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் இவா்களை ஒருங்கிணைத்தாா்.

இதையடுத்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கடிதம் எழுதியுள்ளாா்.

மேலும், மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுக்கும் காரைக்கால் மீனவா்கள் கைது விவகாரத்தைத் தொடா்ந்து கண்காணித்து அவா்களை விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறு கடிதம் எழுதியுள்ளாா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT