முகப்பு
புதுச்சேரி

துணைநிலை ஆளுநா் மாளிகையை முற்றுகையிட சென்ற 200 போ் கைது

புதுச்சேரியில் தமிழ் வழிகல்வியைக் கட்டாயமாக்க கோரி, தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் அண்ணா சிலை அருகிலிருந்து துணைநிலை ஆளுநா் மாளிகை நோக்கி ஊா்வலமாகச் சென்ற 200 போ் கைது

Updated On : 17 மார்ச், 2026 at 11:27 PM
பகிர்:

புதுச்சேரியில் தமிழ் வழிகல்வியைக் கட்டாயமாக்க கோரி, தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் அண்ணா சிலை அருகிலிருந்து துணைநிலை ஆளுநா் மாளிகை நோக்கி ஊா்வலமாகச் சென்ற 200 போ் கைது செய்யப்பட்டனா்.

ஊா்வலத்துக்கு தமிழ் உரிமை இயக்கத் தலைவா் பாவாணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சிவ. வீரமணி, அழகா், ஆறு. செல்வன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஊா்வலத்தை தமிழமல்லன் தொடங்கி வைத்தாா். பொருளாளா் லோகு அய்யப்பன் தொடக்க உரையாற்றினாா்.

பொதுச்செயலா் மங்கையா் செல்வன் உள்ளிட்டோா் பேசினா். ஊா்வலம் அண்ணா சாலை, நேரு வீதி வழியாக ஜென்மராக்கினி கோயில் அருகே வந்தபோது போலீஸாா் தடுத்து நிறுத்தி 200 பேரைக் கைது செய்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →