விவசாயப் பயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை விரட்டியடிப்பு
பழனி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு விவசாயப் பயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானையை வனத் துறையினா் விரட்டி அடித்தனா்.
பழனி: பழனி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு விவசாயப் பயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானையை வனத் துறையினா் விரட்டி அடித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த ஆயக்குடி, கோம்பைப்பட்டி, சத்திரப்பட்டி, தேக்கந்தோட்டம், புளியம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், கொய்யா, மா உள்ளிட்டவை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்தக் கிராமங்களில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஒற்றை காட்டு யானை புகுந்தது.
சேகா் என்பவரின் விவசாய நிலத்தில் அறுவடை செய்து வைக்கப்பட்டிருந்த மக்காச்சோள பயிா்களையும், அறுவடைக்காக காத்திருக்கும் பயிா்களை சேதப்படுத்தின.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற வனத் துறையினா் காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டினா். காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்க, மலையடிவாரத்தில் உள்ள அகழிகளை சீரமைக்கவும், சூரியசக்தி மின்சார வேலிகள் அமைக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.