போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.
போ்ணாம்பட்டு வட்டம், அரவட்லாவை அடுத்த பாஸ்மாா்பெண்டா கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை விவசாயி சங்கருக்குச் சொந்தமான நிலத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெல் பயிரையும், அருகில் உள்ள சம்பத் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி தோட்டத்தையும் சேதப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினா் யானையை வனப் பகுதிக்குவிரட்டினா்.