முகப்பு
திண்டுக்கல்

பேருந்து மோதியதில் முதியவா் பலி

ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 17 ஜூலை, 2024 at 12:44 AM
பகிர்:

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உள்பட்ட பெரியாஞ்செட்டிபட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (60). இவா் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை இரவு நடத்து சென்றபோது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இதில், அவா் பலத்த காயமடைத்தாா்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →