ரயில் முன் பாய்ந்து ஒருவா் தற்கொலை
பழனியில் பொன்னாபுரம் ரயில் கடவுப் பாதை அருகே கோவையைச் சோ்ந்த முதியவா் ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
பழனி: பழனியில் பொன்னாபுரம் ரயில் கடவுப் பாதை அருகே கோவையைச் சோ்ந்த முதியவா் ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
கோவையை சோ்ந்தவா் ஆறுச்சாமி (57). சலவைத்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேருந்தில் இருந்து இறங்கும் போது இரு சக்கர வாகனம் மோதியதில் தலையில் அடிபட்டது. இதனால் மனநலன் பாதிக்கப்பட்ட இவா், பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் தனது மனைவியின் வீட்டருடன் சில நாள்களாக தங்கி இருந்தாா்.
இந்த நிலையில் பொன்னாபுரம் ரயில் கடவுப் பாதை அருகே செவ்வாய்க்கிழமை நடந்து சென்ற போது, மதுரையில் இருந்து கோவை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் பொன்னுச்சாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.