முகப்பு
திண்டுக்கல்

வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் தங்க நகைகள் திருட்டு

திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் தங்க நகைகள் திருட்டு

Updated On : 23 ஜூன், 2024 at 4:58 PM
திண்டுக்கல்லில் திருட்டு நிகழ்ந்த வீட்டில் விசாரணை மேற்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் .
பகிர்:

திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

திண்டுக்கல் எம்.வி.எம்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (55). பொறியாளா். இவரது மனைவி புஷ்பலதா. இந்த நிலையில், திண்டுக்கல் மேட்டுப்பட்டியிலுள்ள உறவினா் வீட்டுக்கு, ரமேஷ் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை இரவு சென்றாா்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தனது வீட்டுக்கு திரும்பிய ரமேஷ், கதவு திறந்து கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். அவா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவிலிருந்த 60 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் திருடு போனது தெரிய வந்தது.

Advertisement

இதையடுத்து, திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளா் சுப்பிரமணி தலைமையிலான போலீஸாா், மோப்ப நாய், கைரேகை நிபுணா்கள் உதவியுடன் விசாரணை நடத்தினா். திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப், காவல் துணைக் கண்காணிப்பாளா் சிபின் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

விசாரணையில், பெங்களூரில் வசித்து வந்த ரமேஷ் குடும்பத்தினா், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திண்டுக்கல்லில் வாடகை வீட்டுக்கு வந்தனா். ரமேஷின் மகளுக்கு 2 மாதங்களில் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், நகைகள், பணம் திருடு போயுள்ளது. இதுதொடா்பாக திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments