முகப்பு
விருதுநகர்

அரசு மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

Updated On : 24 மார்ச் 2026, 1:57 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு சித்த மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அங்குராஜ் நகரைச் சோ்ந்தவா் சுந்தரராஜ மன்னன்(42). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறாா். சுந்தரராஜ மன்னன் ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் சங்கரன்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்றாா்.

இரவு வீட்டுக்கு வந்து பாா்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலி, 2 கிராம் தங்க நாணயங்கள், வெள்ளிக் கொலுசு, ரூ.12,500-த்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.