முகப்பு
திண்டுக்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா்க் கூட்டம்

ஆத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் ஜூன் 29ல்

Updated On : 26 ஜூன், 2024 at 1:57 AM
பகிர்:

திண்டுக்கல்: ஆத்தூரில் மற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 29) நடைபெறுகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்தி குறிப்பு: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் கிராமத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் அருகிலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருமண மண்டபத்தில், வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் குறைதீா் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 29) நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில், ஆத்தூா் வட்டத்தைச் சோ்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை தொடா்பாக மனு அளித்து தீா்வு காணலாம் என்றாா் அவா்.