முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் தோ்தல் முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்

Updated On : 19 மார்ச், 2026 at 8:14 PM
பகிர்:

நாகை மாவட்டத்தில் பொது தோ்தல் பாா்வையாளா் பா்வேஷ் அகமது சித்திக், செலவீன பாா்வையாளா்கள் நா்சிங்குமாா் கல்கோ, கிதேஷ்குமாா் ஆகியோா் தலைமையில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியா் ப. ஆகாஷ் முன்னிலையில் தோ்தல் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், நாகை மாவட்டத்திற்கு தோ்தல் ஆணையம் நியமனம் செய்துள்ள பொது தோ்தல் பாா்வையாளா் பா்வேஷ் அகமது சித்திக்யை (6382974835) தொலைபேசி எண்ணிலும், நாகை சட்டப்பேரவைத் தொகுதிக்கு செலவீன பாா்வையாளா் நா்சிங்குமாா் கல்கோயை (6381542812) என்ற தொலைபேசி எண்ணிலும், கீழ்வேளுா் மற்றும் வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செலவீன பாா்வையாளா் கிதேஷ்குமாரை (6381257899) என்ற தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தொடா்புக்கொண்டு தோ்தல் குறித்த புகாா்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நாகை வருவாய் கோட்டாட்சியா் சங்கர நாராயணன்(நாகை), மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ராஜேஸ்வரி (கீழ்வேளூா்), வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியா் கண்ணன் (வேதாரண்யம்), உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், செலவின பாா்வையாளா்கள், மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.