முகப்பு
திண்டுக்கல்

பாஜக மீது அடக்குமுறையை கையாண்டதாக குற்றச்சாட்டு

திமுக அரசு பாஜகவினா் மீது அடக்குமுறையை கையாண்டதாக குற்றச்சாட்டு

Updated On : 26 ஜூன், 2024 at 12:45 AM
பகிர்:

திண்டுக்கல்: கள்ளச்சாராய விவாகரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் மீது திமுக அரசு அடக்கு முறையை கையாண்டதாக பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினா் புரட்சி கவிதாசன் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25-ஆம் தேதியை கருப்பு தினமாக அணுசரித்து வருகிறோம். நெருக்கடி நிலையால் ஆட்சியை இழந்த திமுக, தற்போது காங்கிரசுடன் கூட்டணி வைத்து, அரசியலமைப்பை காக்கப் போவதாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் மீது திமுக அரசு அடக்கு முறையை திணித்தது. ஆனால், அதிமுக ஆா்ப்பாட்டத்தில் இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படவில்லை. சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு செய்து நாடகத்தை அரங்கேற்றி வருகிறது என்றாா் அவா். அப்போது பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் ஜி.தனபாலன் உடனிருந்தாா்.