ஒட்டன்சத்திரம் ஒன்றியக் குழுக் கூட்டம்
ஒட்டன்சத்திரம் ஒன்றியக் குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றியக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் மு.அய்யம்மாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் காயத்ரிதேவி, வட்டார வளா்ச்சி அலுவலா் காமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் சகுந்தலா, சங்கீதா பழனிச்சாமி, மேலாளா் வடிவேல் முருகன், கணக்காளா் ஜெகதீஷ், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.