முகப்பு
தற்போதைய செய்திகள்

ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகக் குழுக் கூட்டம்!

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வரும் நிர்வாகக் குழுக் கூட்டம் குறித்து...

Updated On : 18 மார்ச் 2026, 11:32 am IST
தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நிர்வாகக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்று வருகிறது.

பாமக தற்போது இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது.

ராமதாஸ் தலைமையிலான அணி யாருடன் கூட்டணி என்ற எதிா்பாா்ப்பு எழுந்த நிலையில், பேரவைத் தோ்தல், கூட்டணி நிலைப்பாடு குறித்து விவாதிக்க நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் புதன்கிழமை நடைபெற்று வருகிறது.

Advertisement

கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவர் ஶ்ரீ காந்தி, கெளரவத் தலைவர் கோ.க.மணி, சேலம் மேற்குத் தொகுதி எம்எல்ஏ ஆர். அருள் உள்ளிட்ட 20 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு, கூட்டணி குறித்து நிலைப்பாடு, கட்சித் தொடர்பான நீதிமன்ற வழக்கு நிலவரம் போன்றவை குறித்து நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

summary

PMK executive committee meeting chaired by Ramadoss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.