கொடைக்கானலில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
கொடைக்கானலில் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
கொடைக்கானல்: கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை விட்டு விட்டு மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக பகல் நேரங்களில் விட்டு,விட்டு மழை பெய்தது. இந்த கொடைக்கானல், செண்பகனுா், நாயுடுபுரம், வில்பட்டி, சின்னப் பள்ளம், பெரும் பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமாா் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
கொடைக்கானலில் காற்றுடன் பெய்த மழையால் மின் தடை ஏற்பட்டது.