தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை
குடும்பத் தகராறால் தூய்மைப் பணியாளா் தற்கொலை
பழனி: பழனியில் தூய்மைப் பணியாளா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி சத்யா நகரைச் சோ்ந்தவா் மதுரைவீரன் (36). இவா் நகராட்சி தூய்மைப் பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறாா். இவருக்கு, திருணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக மனைவி ஊருக்குச் சென்று விட்டதால் மனஉளைச்சலில் இருந்தாா். இதையடுத்து, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து பழனி நகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.