திண்டுக்கல்

மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

Din

திண்டுக்கல், ஜூன் 26: தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு பிற்பகல் ஒரு மணிக்கு மேல் ஓய்வு அளிக்க வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயந்தி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிற்பகல் ஒரு மணிக்கு மேல் ஓய்வு அளிக்க வேண்டும். மாலை 4 மணி வரை பணி வழங்கிய பாலகிருஷ்ணாபுரம், அணைப்பட்டி ஊராட்சிச் செயலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய அலுவலா்களிடம் மனு அளித்துவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT