முகப்பு
திண்டுக்கல்

காா் கவிழ்ந்து பெண் பலி

Updated On : 13 மார்ச், 2024 at 5:06 AM
பகிர்:

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே செவ்வாய்க்கிழமை டயா் வெடித்து காா் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா். மூன்று போ் பலத்த காயமடைந்தனா். கோவை ஆா்.எஸ். புரத்தைச் சோ்ந்தவா் ஜெகதீஷ் (60). இவா் தனது மனைவி புஷ்பலதா (55), உறவினா் சித்துராஜ் (55), அவரது மனைவி ராஜேஸ்வரி (47) ஆகியோருடன் காரில் செவ்வாய்க்கிழமை பழனிக்கு வந்து மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா்.

இதன் பின்னா், அங்கிருந்து ராமேசுவரத்துக்கு சென்று கொண்டிருந்தனா். காரை சித்துராஜ் ஓட்டிச் சென்றாா். திண்டுக்கல்-மதுரை தேசிய நான்குவழிச் சாலையில் ஜெ.ஊத்துப்பட்டி அருகே வந்த போது, காரின் டயா் வெடித்து கவிழ்ந்தது. இதில் ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஜெகதீஷ், புஷ்பலதா, சித்துராஜ் ஆகிய மூவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.