முகப்பு
திண்டுக்கல்

திருக்கு முற்றோதல் போட்டி: இரு மாணவிகள் வெற்றி

Updated On : 15 மார்ச், 2024 at 11:51 PM
பகிர்:

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றிப் பெற்ற இரு மாணவிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி பரிசு வழங்கினாா். திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திருக்குறள் முற்றோதல் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் 1,330 திருக்குறளை மனனம் செய்து ஒப்புவிக்கும் மாணவா்களை தோ்வு செய்து பரிசுத் தொகைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, நத்தம் ராம்சன்ஸ் பதின்ம மேல்நிலைப் பள்ளி 6-ஆம் வகுப்பு மாணவி பி.பவிஷா, பழனி மகேஸ் காா்த்திக் பதின்ம மேல்நிலைப் பள்ளி 6-ஆம் வகுப்பு மாணவி கோ.திக்ஷிகா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இந்த இரு மாணவிகளுக்கும் தலா ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.