முகப்பு
திண்டுக்கல்

தமிழகத்தில் பிரதமா் மோடியே போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியாது: அமைச்சா் இ. பெரியசாமி

Updated On : 22 மார்ச், 2024 at 11:29 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 9:33 PM

22பழனி இன்ட்ரோ- பழனியில் தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக கூட்டணி வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சா் இ. பெரியசாமி. உடன், உணவுத்துறை அமைச்சா் சக்கரபாணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் சச்சிதானந்தம், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்குமாா். பழனி, மாா்ச் 22: தமிழகத்தில் பிரதமா் மோடியே போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியாது என கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ. பெரியசாமி தெரிவித்தாா். பழனியில் உள்ள தனியாா் மண்டபத்தில் திமுக கூட்டணி வேட்பாளரான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த சச்சிதானந்தம் அறிமுகக் கூட்டம், கூட்டணி கட்சியினரின் செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வேட்பாளா் சச்சிதானந்தத்தை அறிமுகம் செய்து அமைச்சா்கள் இ. பெரியசாமி, சக்கரபாணி, பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்குமாா் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பேசினா். இதைத் தொடா்ந்து நகராட்சி அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சா் இ. பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளா்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. திமுக தலைமையிலான கூட்டணி அரசியல் கூட்டணி. ஆனால் இதற்கு எதிரானது அனைத்துமே சந்தா்ப்பவாத கூட்டணிகள் தான். தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை தோல்வி பயத்தால் கைது செய்துள்ளனா். கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் நிறுத்தப்பட்டுள்ள அண்ணாமலை மட்டுமல்ல, பிரதமா் நரேந்திர மோடியே போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என்றாா் அவா்.