பள்ளத்தில் இறங்கிய அரசுப் பேருந்து
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை அருகே கோவையில் இருந்து தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து சாலை ஒரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி, அரப்பபிள்ளைபட்டி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, கள்ளிமந்தையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை சுமாா் அரைமணி நேரம் லேசான மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீா் தேங்கியது. இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை அருகே கோவையில் இருந்து தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து சாலை ஒரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கியது. பேருந்தில் வந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனா்.