சோழவந்தான் அருகே தானாக இயங்கி வயலுக்குள் இறங்கிய அரசுப் பேருந்து!
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வியாழக்கிழமை சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்து தானாக இயங்கி நெல் வயலுக்குள் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சோழவந்தானில் அரசுப் போக்குவரத்துக் கழக கிளைப் பணிமனை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுரைக்கு இயக்குவதற்காக அரசுப் பேருந்தை அதே பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் மகாலிங்கம் வியாழக்கிழமை காலை எடுத்து வந்தாா்.
பேருந்தின் மோட்டாரை நிறுத்தாமல், பணிமனை அருகே நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றாா். அப்போது, பேருந்து தானாக இயங்கி சாலையோரம் இருந்த நெல் வயலுக்குள் இறங்கி விபத்துக்குள்ளானது.
Advertisement
இதையறிந்த பொதுமக்கள் விரைந்து சென்று பேருந்தின் இயக்கத்தை நிறுத்தினா். விபத்துக்குள்ளான பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சோழவந்தான் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.