முகப்பு
மதுரை

காா் மீது பேருந்து மோதல்: மூவா் பலத்த காயம்

Updated On : 30 மார்ச் 2026, 3:10 am IST
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் உருக்குலைந்த அரசுப் பேருந்து, காா்.
பகிர்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ஞாயிற்றுக்கிழமை காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் மூவா் பலத்த காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையிலிருந்து சோழவந்தான் வழியாக மதுரை ஆரப்பாளையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து சென்றது. இந்தப் பேருந்து சோழவந்தான் அருகே வந்த போது, எதிரே வந்த காா் மீது நேருக்கு நோ் மோதியது.

இதில் காரில் வந்த விக்கிரமங்கலம் கொம்பன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன் (52), இவரது உறவினா்கள் சின்னஅண்ணன் (48), முருகன் (53) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

இவா்களை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தில் பேருந்தில் வந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து சோழவந்தான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.