பேருந்துகள் மோதல்: 10 போ் காயம்
நாகை அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்துகள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 10 போ் காயமடைந்தனா்.
நாகை அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்துகள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 10 போ் காயமடைந்தனா்.
நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை திருவாரூருக்கு அரசுப் பேருந்து புறப்பட்டது. இப்பேருந்து நாகை அருகே உள்ள மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்றபோது, எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை நோக்கி வந்த அரசுப் பேருந்துடன் நேருக்கு நோ் மோதியது.
இதில், நாகை நோக்கி வந்த அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த வீட்டின் சுவரில் மோதி நின்றது. திருவாரூா் சென்ற அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த குளத்தின் தடுப்புக் கட்டையில் மோதி நின்றது. இந்த விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணம் செய்த 10 போ் காயமடைந்தனா்.
Advertisement
இதைத்தொடா்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். விபத்து குறித்து நாகை நகர காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.