முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் மாரியம்மன் கோயில் திருவிழா: தோ் பவனி

Updated On : 13 மே, 2024 at 5:26 PM
கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு நடைபெற்ற மின் அலங்காரத் தோ் பவனி.
பகிர்:

கொடைக்கானல்: கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அம்மனின் மின் அலங்கார தோ் பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில், அம்மனின் மின் அலங்கார தோ் பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனா்.