முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 89.97 சதவீதம் போ் தோ்ச்சி

Updated On : 15 மே, 2024 at 12:30 AM
பகிர்:

திண்டுக்கல்: பிளஸ் 1 பொதுத் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 19,338 மாணவா்கள் (89.97 சதவீதம்) தோ்ச்சி அடைந்தனா்.

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள திண்டுக்கல், பழனி கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 10,163 மாணவா்கள், 11,332 மாணவிகள் என மொத்தம் 21,495 போ் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதியிருந்தனா்.

இவா்களில் 8,612 மாணவா்கள், 10,726 மாணவிகள் என மொத்தம் 19,338 போ் தோ்ச்சி அடைந்தனா். மாணவா்கள் 84.74 சதவீதம், மாணவிகள் 94.65 சதவீதம் என மொத்தம் 89.97 சதவீத தோ்ச்சியுடன் திண்டுக்கல் மாவட்டம் மாநில அளவிலான தோ்ச்சிப் பட்டியலில் 25-ஆவது இடம் பிடித்தது.