முகப்பு
திண்டுக்கல்

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக தெருமுனைக் கூட்டம்

Updated On : 22 மே, 2024 at 12:44 AM
பகிர்:

திண்டுக்கல்: பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சாா்பில் தெருமுனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் பேகம்பூா் பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்டத் துணைத் தலைவா் எம். முகமது அனிபா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் கே. பாலபாரதி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்டச் செயலா் வ. கல்யாண சுந்தரம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்லாமிய மக்கள் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கும், இதற்கு துணை நிற்கும் அமெரிக்காவைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.