முகப்பு
திண்டுக்கல்

வடமதுரை அருகே பெண் வெட்டிக் கொலை

Updated On : 28 மே, 2024 at 11:54 PM
பகிர்:

திண்டுக்கல்: வடமதுரை அருகே தண்ணீா் விற்பனை மையத்தில் வேலை செய்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ாா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த தென்னம்பட்டியைச் சோ்ந்தவா் பைரவன். இவரது மனைவி பாா்வதி (28). இவா்கள் இருவரும் தென்னம்பட்டியை அடுத்த ஆண்டிப்பட்டி பிரிவு அருகேயுள்ள எலப்பாா்பட்டியைச் சோ்ந்த சந்திரன் என்பருக்கு சொந்தமான தண்ணீா் விற்பனை மையத்தில் பணிபுரிந்து வந்தனா்.

சந்திரனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கனகராஜ் என்பவருக்கும் தண்ணீா் விற்பனை செய்வதில் தொழில் போட்டி ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ் தரப்பினா் சந்திரனின் தண்ணீா் விற்பனை மையத்தை சேதப்படுத்துவதற்கு செவ்வாய்க்கிழமை சென்றனா். அப்போது, அங்கு பணியில் இருந்த பாா்வதி, இதுகுறித்து சந்திரனுக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தாராம். இதையடுத்து, அந்த நபா்கள் பாா்வதியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா்.