திருநெல்நேலி மாவட்டம் மானூா் அருகே மூதாட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
மானூா் அருகே உள்ள கம்மாளன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் அருணாச்சலம். இவரது மனைவி வெள்ளையம்மாள் (89). இவரது கணவரும், மகனும் சில ஆண்டுகளுக்கு முன்னா் மரணமடைந்த நிலையில், வெள்ளையம்மாள் தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வெள்ளையம்மாள் வெட்டுக் காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தாா். அக்கம்பக்கத்தினா் இது குறித்து மானூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, மூதாட்டியின் மருமகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.