வீரமாத்தியம்மன் கோயில் குடமுழுக்கு
பழனியை அடுத்த நல்லூரில் அமைந்துள்ள விநாயகா், வீரமாத்தியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பழனியை அடுத்த நல்லூரில் அமைந்துள்ள விநாயகா், வீரமாத்தியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நல்லூா் வெண்ணலாங்காட்டுத் தோட்டத்தில் விநாயகா், வீரமாத்தியம்மன், சித்தயன், கருப்பராயன், கன்னிமாா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கோபுரம், சுற்றுச் சுவா், சுவாமி சந்நிதிகள் சீரமைக்கப்பட்டு, குடமுழுக்கு விழா பணிகள் நடைபெற்றது.
இதையொட்டி, செவ்வாய்க்கிழமை நவக்கிரக ஹோமம், வாஸ்து ஹோமம் நடத்தப்பட்டு, முதற்கால வேள்வி யாகம் நடைபெற்றது. பின்னா், பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீா்த்தம் நிரம்பிய கலசங்கள் கணியூா் மீனாட்சிஅம்மன் கோயிலில் வைக்கப்பட்டு, சிவாசாரியா்கள் தலைமையில், வேதமந்திரம் ஓதப்பட்டது.
பின்னா், புதன்கிழமை இரண்டாம் கால வேள்வி யாகம் நடத்தப்பட்டு, பூா்ணாஹுதி நடைபெற்றது. தொடா்ந்து, கலசங்கள் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, காலை 9 மணிக்கு மேல் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்
இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனா்.