முகப்பு
திண்டுக்கல்

காளியம்மன் கோயில் குடமுழுக்கு

பழனியை அடுத்த புதுஆயக்குடி தெற்குமுக காளியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2024 at 11:53 PM
புதுஆயக்குடி தெற்குமுக காளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கையொட்டி, கோபுர கலசத்துக்கு ஊற்றப்பட்ட புனிதநீா்.
பகிர்:

பழனியை அடுத்த புதுஆயக்குடி தெற்குமுக காளியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை முதல் கால வேள்வியுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கியது. பின்னா், கோயிலில் புனித தீா்த்தம் நிரம்பிய கலசம் வைக்கப்பட்டு தீபத்திருமகள் வழிபாடு, திருவிளக்கு ஏற்றுதல், வேண்டுதல் விண்ணப்பம், இறைவணக்கம், கணபதி வழிபாடு ஆகியவை நடைபெற்றன.

இதில் திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கோயிலில் வழிபட்டனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரண்டாம் கால வேள்வி நடைபெற்றது. பின்னா், மேளதாளம் முழங்க புனிதநீா் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, கோபுர கலசங்களுக்கு சிவசாரியா்கள் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு விழா நடத்தினா். இதைத் தொடா்ந்து, மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம், தீா்த்த பிரசாதம் வழங்கப்பட்டன.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா், தேவா் பேரவை, நாச்சியாா்ஸ் மகளிா் அணியினரும் செய்தனா்.

இந்தக் கோயில் குடமுழுக்கு விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெருகிறது.