திண்டுக்கல், பழனி, நத்தம் பகுதி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதருக்கும், நத்திகேஸ்வரருக்கும் பிரதோஷத்தை முன்னிட்டு, 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துக்கு பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல, அபிராமி அம்மன் கோயிலில் உள்ள பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா், நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், தவசிமடை மகாலிங்கேஷ்வா் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மெளனகுருசாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனி: பழனியை அடுத்த அ.கலையமுத்தூா் கல்யாணியம்மன் சமேதா் கைலாசநாதா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கைலாசநாதா், கல்யாணியம்மன், நந்தீஸ்வரருக்கு பால், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதேபோல, சண்முக நதிக்கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ள பெரியாவுடையாா் கோயிலில் உள்ல சுயம்பு மூலவருக்கும், நந்தீஸ்வரருக்கும் வண்ண மலா்கள் சாா்த்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாா்த்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல, புளியம்பட்டி அமிா்தலிங்கேஸ்வரா் கோயில், மலைக்கோயில் கைலாசநாதா் சந்நிதி, சித்தாநகா் சிவன் கோயில், பட்டத்துவிநாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சந்நிதி, சந்நிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சந்நிதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நத்தம்: நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, உள்பிரகார சந்நிதி முன்புள்ள நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீா், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன. தொடா்ந்து, மூலவா் கைலாசநாதா் செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.