முகப்பு
திண்டுக்கல்

ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

ஆயுத பூஜை தொடா் விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டலம் சாா்பில் 70 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Updated On : 9 அக்டோபர், 2024 at 8:45 PM
பகிர்:

ஆயுத பூஜை தொடா் விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டலம் சாா்பில் 70 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுதொடா்பாக திண்டுக்கல் மண்டல அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு அக்.13-ஆம் தேதி வரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்கு வரும் பயணிகளுக்காக 70 பேருந்துகளும், விடுமுறை முடிந்து சென்னை திருப்புவோருக்கு வசதியாக 70 பேருந்துகளும் இயக்கப்படும்.

இதேபோல, தேனி மாவட்டத்திலிருந்து திருப்பூா், கோவை, திருச்சி, சேலம் போன்ற பகுதிகளுக்கு நாள்தோறும் 60 பேருந்துகள் இயக்கப்படும். ரரர.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணைய சேவை மையம் மூலம் முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.